தன்னை இழிவுபடுத்திய பாகிஸ்தான் வீரர்களுக்கு முச்சதத்தால் பதிலடி கொடுத்தேன் என முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
பிரபல வீரரான சேவாக் இந்திய அணிக்காக 101 டெஸ்டுகள், 251 ஒருநாள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக முச்சதம் அடித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சேவாக் கூறியதாவது:
1999-ல் மொஹலியில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகம் ஆனேன். அப்போது எனக்கு 20-21 வயது இருக்கும். நான் பேட்டிங் செய்ய சென்றபோது அப்ரிடி, சோயிப் அக்தர், யூசுப் மற்றும் அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் என்னை இழிவுபடுத்தி வரவேற்றார்கள். அவர்கள் பயன்படுத்திய சில கெட்ட வார்த்தைகளைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. அப்போது என்னால் அவர்களுக்குப் பதில் எதுவும் கூறமுடியவில்லை. அது என் முதல் ஆட்டம். பதற்றத்துடன் இருந்தேன். மைதானத்தில் 25,000 பேர் வந்திருந்தார்கள்.
பிறகு அணியில் எனக்கான நிரந்தர இடம் கிடைத்த பிறகு, என்னை இழிவுபடுத்தியதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக 2003-04-ல் நாங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றபோது முச்சதம் அடித்தேன். அதன்மூலம் அவர்களை முடிந்தளவு பழிவாங்கினேன். அதேபோல இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடைபெற்றாலும் எனக்குப் புல்லரிப்பு ஏற்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


