தொடக்க வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய புதிய சாதனை

2013 முதல் நிரந்தரமாகத் தொடக்க வீரராகக் களமிறங்கி வருகிறார். 
தொடக்க வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய புதிய சாதனை
Updated on
1 min read

தொடக்க வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் எடுத்துள்ளார் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்த ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார். 246 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டியுள்ளார். குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்த தொடக்க வீரர்களில் 2-ம் இடம். தொடக்க வீரராக 241 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சர்வதேச கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸில் 11,000 ரன்கள்

சச்சின் - 241 இன்னிங்ஸ்
ரோஹித் சர்மா - 246 இன்னிங்ஸ்

34 வயது ரோஹித் சர்மா, 11,000 ரன்களை எடுத்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ளார். 49.31*. தொடக்க வீரராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜெயசூர்யா முதல் இடத்தில் உள்ளார். 563 இன்னிங்ஸில் 19,298 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடக்க வீரராக ரோஹித் சர்மா எடுத்த சதங்கள் - 35

டெஸ்ட் - 4
டி20 - 4
ஒருநாள் - 27

2009-ல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாகத் தொடக்க வீரராகக் களமிறங்கினார். 2013 முதல் நிரந்தரமாகத் தொடக்க வீரராகக் களமிறங்கி வருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தொடக்க வீரர்கள்

கெய்ல் - 527 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 364 சிக்ஸர்கள்     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com