கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குறைந்த இன்னிங்ஸில் 100 டெஸ்ட் விக்கெட்டுகள்: கபில் தேவை முந்தினார் பும்ரா!

​இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் போப் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 100 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஜாஸ்பிரீத் பும்ரா படைத்துள்ளார்.

News image
போல்டான பேர்ஸ்டோவ்
Updated On :6 செப்டம்பர் 2021, 2:18 pm

DIN


இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டத்தில் ஆலி போப் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 100 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஜாஸ்பிரீத் பும்ரா படைத்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 466 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து கடைசி நாள் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் ஹசீப் ஹமீத் (63) விக்கெட்டை முதலில் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். இதன்பிறகு, ஜாஸ்பிரித் பும்ரா சிறப்பான ஓவர்களை வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நடுங்கச் செய்தார். இதனால், முதலில் ஆலி போப் 2 ரன்களுக்கு பும்ரா பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் யார்க்கர் பந்தில் போல்டானார். இதனால், இங்கிலாந்து கடுமையான நெருக்கடிக்குள்ளானது.

இதில் போப் விக்கெட் பும்ராவின் 100-வது டெஸ்ட் விக்கெட். இந்த மைல்கல்லை அவர் 24-வது டெஸ்ட் ஆட்டத்தில் நிகழ்த்தியுள்ளார்.

இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக, கபில் தேவ் 25-வது டெஸ்ட் ஆட்டத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.