அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தெ.ஆ. அணியை 125 ரன்களுக்குச் சுருட்டி தொடரை வென்ற இலங்கை அணி: ஹைலைட்ஸ் விடியோ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றுள்ளது இலங்கை அணி.

News image
இலங்கை அணி (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 4:06 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றுள்ளது இலங்கை அணி.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் ஒருநாள் ஆட்டத்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையும் 2-வது ஒருநாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவும் வென்றன. இதனால் கடைசி ஒருநாள் ஆட்டத்தை வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் முனைப்புடன் விளையாடின. 

கொழும்பில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாகப் பந்துவீசியதால் இலங்கை அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வேகப்பந்து வீச்சுக்குப் பெயர் பெற்ற தெ.ஆ. அணி இன்று நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு முதல்முறையாக 40 ஓவர்களை வீசி ஆச்சர்யப்படுத்தியது. (இதற்கு முன்பு 1996-ல் மும்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 33 ஓவர்களுக்குச் சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்தது.) ஷம்சி, மஹாராஜ், மார்க்ரம், லிண்டே ஆகியோ தலா 10 ஓவர்களை வீசினார்கள். இலங்கை பேட்ஸ்மேன் சரித் அசலங்கா அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை 30 ஓவர்களில் 125 ரன்களுக்குச் சுருட்டி 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி. தெ.ஆ. அணியில் கிளாசென் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் அறிமுக வீரர் மஹீஷ் தீக்‌ஷனா அற்புதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை அணி வென்றுள்ளது.

டி20 தொடர் செப்டம்பர் 10 முதல் தொடங்குகிறது.      

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.