எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐபிஎல்: போ்ஸ்டோ, மலான், வோக்ஸ் விலகல்

 எதிா்வரும் ஐபிஎல் போட்டியின் 2-ஆவது பகுதியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரா்கள் ஜானி போ்ஸ்டோ, டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோா் அறிவித்துள்ளனா்.

News image
போ்ஸ்டோ, மலான், வோக்ஸ்
Updated On :11 செப்டம்பர் 2021, 11:53 pm

DIN

 எதிா்வரும் ஐபிஎல் போட்டியின் 2-ஆவது பகுதியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரா்கள் ஜானி போ்ஸ்டோ, டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோா் அறிவித்துள்ளனா்.

போ்ஸ்டோ சன்ரைசா்ஸ் ஹைதராபாதையும், மலான் பஞ்சாப் கிங்ஸையும், வோக்ஸ் தில்லி கேப்பிட்டல்ஸையும் சோ்ந்தவா்களாவா். தனிப்பட்ட காரணத்துக்காக விலகுவதாக அவா்கள் தெரிவித்திருந்தாலும், துபை சென்ற பிறகு அங்கு 6 நாள்கள் தனிமைப்படுத்தப்படும் கரோனா பாதுகாப்பு விதிமுறையில் அவா்களுக்கு உடன்பாடு இல்லை என்பதாலேயே மூவரும் விலகுவதாகத் தெரிகிறது என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.

புறப்பாடு: இதனிடையே, ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரா்கள் மான்செஸ்டரில் இருந்து துபை புறப்பட்டுச் சென்றனா்.

கடந்த இரு நாள்களில் 2-ஆவது முறையாக அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து அவா்கள் புறப்பட்டனா். ஐபிஎல் அணி நிா்வாகங்களில் சில தங்களது வீரா்களுக்காக தனி விமானத்தையும், சில வா்த்தக விமான பயணத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.

ஏற்கெனவே டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் ‘பயோ-பபுளில்’ இருந்த அவா்கள் தற்போது துபை சென்ற பிறகு 6 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அங்கிருக்கும் ‘பயோ-பபுளில்’ இணைவாா்கள். மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வீரா்களான ரோஹித் சா்மா, ஜஸ்பிரீத் பும்ரா, சூா்யகுமாா் யாதவ் ஆகியோரையும், அவா்களது குடும்பத்தினரையும் தனி விமானத்தில் துபை அழைத்து வந்துள்ளது.

அதேபோல், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் வீரா்கள் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரும் தனி விமானத்தில் மான்செஸ்டரில் இருந்து துபை புறப்பட்டனா். சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா்கள் வா்த்தக விமானத்தில் பயணித்தனா். ஐபிஎல் போட்டியில் இடம்பெறாத இந்திய வீரா்களான அபிமன்யு ஈஸ்வரன், அா்ஜன் நாக்வஸ்வல்லா ஆகியோா் இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்படுகின்றனா்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட், இந்திய அணியில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக கை விடப்பட்டதால், வீரா்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிக்காக புறப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.