முதல் டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற தெ.ஆ. அணி (ஹைலைட்ஸ் விடியோ)
அறிமுக டி20 ஆட்டத்திலேயே கேப்டனாகப் பதவி வகித்தார் தெ. ஆ. அணியின் மஹாராஜ்.


இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இலங்கை அணி.
கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 48 ரன்களும் ரீஸா 38 ரன்களும் எடுத்தார்கள். அறிமுக டி20 ஆட்டத்திலேயே கேப்டனாகப் பதவி வகித்தார் தெ. ஆ. அணியின் மஹாராஜ்.
இதன்பிறகு விளையாடிய இலங்கை அணியில் தினேஷ் சண்டிமல் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 66 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...