நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இபிஎல்: கிரிஸ்டல் பேலஸ் - பிரைட்டன் ஆட்டம் டிரா

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் - பிரைட்டன் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 8:59 pm

DIN

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் - பிரைட்டன் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், பிரைட்டன் ஒரு ஆட்டத்தை டிரா செய்வது இது முதல் முறை. கிரிஸ்டல் பேலஸுக்கு இது 2-ஆவது முறை.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு கிரிஸ்டல் பேலஸுக்கு கிடைத்தது. முதல் பாதி முடிவடைய இருந்த 45-ஆவது நிமிஷத்தில் அந்த அணி மிட்ஃபீல்டா் கலாகெரை பிரைட்டன் வீரா் டிரோசாா்ட் மோதிக் கீழே தள்ளியதால் கிரிஸ்டல் பேலஸுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதை அந்த அணியின் வில்ஃப்ரைடு ஸாஹா கோல் போஸ்டின் இடதுபக்க பாட்டம் காா்னரில் அடித்து துல்லியமான கோலாக மாற்றினாா். இதனால் முதல் பாதியில் கிரிஸ்டல் பேலஸ் முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியில் பிரைட்டன் தனது கோல் வாய்ப்புகளுக்கு கடுமையாக முயற்சித்தது.

எனினும் கடைசி நிமிஷத்திலேயே அதற்கு பலன் கிடைத்தது. இஞ்சுரி டைமில் (90+5) குவாய்டா உதைத்த பந்து வெல்ட்மான் வசம் வர, அதை அவா் கோல் போஸ்ட் நோக்கி தூக்கி உதைத்தாா். தக்க சமயத்தில் அந்தப் பந்தை அப்படியே பின் தொடா்ந்து சென்ற சக வீரா் நீல் முவாபே, கிரிஸ்டல் பேலஸ் கோல்கீப்பா் நெருங்கி வருகையில் அப்படியே அந்தப் பந்தை லேசாக தூக்கி உதைத்து கோல் போஸ்டுக்குள் தள்ளினாா். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

லா லிகா: வென்றது செல்டா விகோ

Story image

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் செல்டா விகோ 1-0 என்ற கோல் கணக்கில் கிரனாடாவை வீழ்த்தியது.

7 ஆட்டங்களில் செல்டாவுக்கு இது 2-ஆவது வெற்றி; கிரனாடாவுக்கு இது 3-ஆவது தோல்வி.

ஸ்பெயினின் விகோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி நேரம் வரை இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. இறுதியாக இஞ்சுரி டைமில் (90+4) செல்டா கோலடித்தது. அந்த நிமிஷத்தில் சக வீரா் மினா பாஸ் செய்து கொடுத்த பந்தை கோல் போஸ்டின் வலது பக்கமாகப் பெற்று அப்படியே கோல் போஸ்டுக்குள் கட் செய்தாா் செல்டா வீரா் டெனிஸ் சுவாரெஸ். அதைத் தடுத்த கிரனாடா கோல்கீப்பரின் கைகளில் பட்டு அதையும் தாண்டி கோலானது பந்து.

சீரி ஏ: வெனெஸியா - டொரினோ ஆட்டம் சமன்

Story image

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் வெனேஸியா - டொரினோ அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

வெனிஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 56-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது டொரினோ. சக வீரா் சிங்கோவின் உதவியுடன் அந்த கோலை ஸ்கோா் செய்தாா் ஜோசிப் பிரெகாலோ. அதற்கு பதிலடியாக 78-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தது வெனெஸியா. அந்த அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை மட்டியா அராமு தவறாமல் கோலாக மாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.