டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு, பிரபல வீரருக்கு இடமில்லை!

இதே அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:39 am

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகளை டி20 தரவரிசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது ஐசிசி. குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள். அதேபோல குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.

ஹாங்காங் அணிக்காக 2014, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்ற மார்க் சாப்மேன், நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன், மாற்று வீரராகத் தேர்வாகியுள்ளார். டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இதே அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் ஃசைபர்ட் (விக்கெட் கீப்பர்), டெவன் கான்வே, மார்டின் கப்தில், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர், டாட் ஆஸ்லே, இஷ் சோதி, கைல் ஜேமிசன், டிரெண்ட் போல்ட், லாகி ஃபர்குசன், டிம் செளதி, ஆடம் மில்ன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.