மீண்டும் சதமடித்தார் ஜோ ரூட்: லார்ட்ஸ் டெஸ்டில் முன்னிலையை நோக்கி இங்கிலாந்து

இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதமடித்து விளையாடி வருகிறார்.
மீண்டும் சதமடித்தார் ஜோ ரூட்: லார்ட்ஸ் டெஸ்டில் முன்னிலையை நோக்கி இங்கிலாந்து


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதமடித்து விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 89, ஜானி பேர்ஸ்டோவ் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 57 ரன்களுக்கு முகமது சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால், ரூட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய 82-வது ஓவரில் 1 ரன் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22-வது சதத்தைப் பதிவு செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் இவருக்கு இது 4-வது சதம். சதமடித்த ரூட் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

சற்று முன் வரை இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இன்னும் 112 ரன்கள் மட்டும பின்தங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com