எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டெஸ்ட்: முதல் நாளில் இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு

இந்திய ஏ அணிக்கு எதிரான 3-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில், முதல் நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. 

News image
சைனி
Updated On :7 டிசம்பர் 2021, 6:09 am

DIN

இந்திய ஏ அணிக்கு எதிரான 3-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில், முதல் நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. தொடர் டிசம்பர் 9 அன்று நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

3-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 89 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் சரல் எர்வீ 75 ரன்களும் டோனி 58 ரன்களும் ஸோண்டோ 56 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணியில் சைனி 3 விக்கெட்டுகளும் செளரப் குமார் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.