மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

News image
Updated On :19 டிசம்பர் 2021, 4:16 pm

DIN


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

உலக பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரின் லோ கீன் யூவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொண்டார். முதல் கேமின் தொடக்கத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 9-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால், யூ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், முதல் கேமை கிடாம்பி ஸ்ரீகாந்த்  வெறும் 16 நிமிடங்களில் 15-21 என்ற கணக்கில் இழந்தார்.

தங்கப் பதக்கம் வெல்லும் கனவோடு கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது கேமை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடுமையானப் போராட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், அவரால் வெல்ல முடியவில்லை. 20-22 என்ற கணக்கில் இதையும் இழந்தார்.

இதன்மூலம், 15-21, 20-22 என்கிற நேர் கேம் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். எனினும், ஆடவர் ஒற்றையரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

அதேசமயம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை லோ கீன் யூ பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.