முகப்பு விளையாட்டு செய்திகள்
இந்திய அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 305 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 29th December 2021 06:49 PM | Last Updated : 29th December 2021 06:49 PM | அ+அ அ- |

தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கும், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.
130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது.
இதையும் படிக்க | 4-ம் நாள் உணவு இடைவேளை: நிதானமாக விளையாடும் இந்தியா, 200 ரன்களுக்கு மேல் முன்னிலை
இதன்பிறகு, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் 34 ரன்கள் எடுத்தார்.
50.3 ஓவர்களில் இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா சற்று முன்பு வரை 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.