திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

4-ம் நாள் உணவு இடைவேளை: நிதானமாக விளையாடும் இந்தியா, 200 ரன்களுக்கு மேல் முன்னிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 209 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

News image
Updated On :29 டிசம்பர் 2021, 10:40 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 209 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு 10 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷர்துல் தாக்குர். 74 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்த ராகுலின் விக்கெட்டை என்கிடி வீழ்த்தினார். புஜாரா வழக்கம்போல நிதானமாக விளையாடி 52 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். கோலி 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்திய அணி 4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 32 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 209 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று முதல் பகுதியில் 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்துள்ளது. இதனால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விரைவாக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.