ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நியூசி. டி20 தொடர்: இந்திய அணிக்கு மீண்டும் தேர்வான அஸ்வின்

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின்...

News image
Updated On :10 நவம்பர் 2021, 5:50 am

DIN


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய அஸ்வின், 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25.

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் இந்திய டி20 அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். 

டி20 தொடரில் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு அஸ்வின் சஹாலும் அணியில் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.