மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

என். சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்கும் ரவி சாஸ்திரி: காரணம் என்ன தெரியுமா?

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என். சீனிவாசனுக்கு ரவி சாஸ்திரி நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2021, 12:08 pm

DIN

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என். சீனிவாசனுக்கு ரவி சாஸ்திரி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது. ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் ஒரு பேட்டியில் ரவி சாஸ்திரி கூறியதாவது:

என்னைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கு நன்றி. என்னுடைய பயணத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ஒருவரைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல விரும்புகிறேன். என். சீனிவாசன். 2014-ல் இப்பணியை நான் செய்யவேண்டும் என வற்புறுத்தினார். இப்பணியைச் சிறப்பாகச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை அப்போது என்னிடம் இல்லை. என்னை விடவும் என் திறமையில் அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. என். சீனிவாசனின் நம்பிக்கையை நான் வீணடிக்கவில்லை என நம்புகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.