இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சாதித்தது என்ன?
By DIN | Published On : 09th November 2021 01:40 PM | Last Updated : 09th November 2021 01:40 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் பயணம் முடிவடைந்தது. அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
2017-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது. ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி பெற்ற வெற்றிகள்
கிரிக்கெட் வகை | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | டிரா | டை/முடிவில்லை |
டெஸ்ட் | 43 | 25 | 13 | 5 | - |
ஒருநாள் | 76 | 51 | 22 | - | 2/1 |
டி20 | 65 | 43 | 18 | - | 2/2 |
மொத்தம் | 184 | 119 | 53 | 5 | 4/3 |