ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

இந்நிலையில் ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கவாஜா, ஜை ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆஸி. டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி

டிம் பெயின் (கேப்டன்), டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசான், நாதன் லயன், மைக்கேல் நசீர், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வப்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com