சத்தோகிராம் டெஸ்ட்: வங்கதேசம் - 330

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 114.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் அடித்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 114.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் அடித்தது.

அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 114 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்தபடியாக முஷ்ஃபிகா் ரஹிம் 11 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்திருந்தாா். எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தன.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஹசன் அலி 5 விக்கெட்டுகள் சாய்க்க, ஷாஹீன் ஷா அஃப்ரிதி, ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், சஜித் கான் 1 விக்கெட்டும் எடுத்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் சனிக்கிழமை முடிவில் 57 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் அடித்திருந்தது. அபித் அலி 93, அப்துல்லா ஷஃபிக் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com