
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ஓரளவுக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அபுதாபி மைதானத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்படும் என அறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.