ரன்களைக் கட்டுப்படுத்துவதில் தேர்ச்சி: அஸ்வினைப் பாராட்டும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் தேர்ச்சியடைந்துள்ளார் அஸ்வின்.
ரன்களைக் கட்டுப்படுத்துவதில் தேர்ச்சி: அஸ்வினைப் பாராட்டும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் 35 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி - 6.66. 

இந்நிலையில் இந்திய டி20 அணியில் அஸ்வின் விளையாடுவது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு அஸ்வினைத் தேர்வு செய்தது அபாரம். கடந்த சில வருடங்களாக டி20 லீக்குகளில் அஸ்வின் நன்றாக விளையாடி வருகிறார். சஹாலுடன் இணைந்து பந்துவீசும்போது அஸ்வினை எனக்குப் பிடிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் வேலையே விக்கெட்டுகளை எடுப்பது தான், தென்னாப்பிரிக்காவுக்காக ஷம்சி, மஹாராஜ் அதைச் செய்கிறார்கள். ஒரு டி20 சுழற்பந்து வீச்சாளராக இந்த விஷயத்தில் தான் அஸ்வின் சற்று பின்தங்குகிறார். அவர் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். சஹால் அல்லது விக்கெட் எடுக்கும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் அஸ்வின் நல்ல தேர்வாக இருப்பார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் தேர்ச்சியடைந்துள்ளார் அஸ்வின்.

டி20 உலகக் கோப்பை அணியில் சஹால் நிச்சயம் இருப்பார். அஸ்வினின் போட்டியாளர்கள் யார்? அக்‌ஷர் படேல், ஜடேஜா, ஹூடா, குல்தீப் யாதவ். டி20 கிரிக்கெட்டில் சஹாலும் குல்தீப் யாதவும் ஒன்றாக இணைந்து பந்துவீச வாய்ப்பில்லை. எனவே சஹால் & அக்‌ஷர் படேல் அல்லது சஹால் & அஸ்வின். சஹாலுக்குக் காயம் என்றால் குல்தீப் யாதவைச் சில ஆட்டங்களில் விளையாட வைக்கலாம். சஹாலும் குல்தீப் யாதவும் ஒருநாள் கிரிக்கெட்டில் இணைந்து பந்துவீச வாய்ப்பு உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com