இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் நடை போட்டியில் இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார்.
இங்கிலாந்தின் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் 10,000 நடைப் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 43 நிமிடம், 38 நொடிகளில் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் நடைப் பந்தயங்களில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஆண்களுக்கான 10,000 மீட்டர் நடை போட்டியில் 38:42.33 நிமிடங்களில் இலக்கை கடந்து 3வது இடத்தை பிடித்தார் சந்தீப்.