புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாரா தடகளம்: இந்தியா்கள் உலக சாதனை

கா்நாடகத்தில் நடைபெறும் 4-ஆவது இந்திய ஓபன் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், வட்டு எறிதல் வீரா் யோகேஷ் கதுனியா ஆகியோா் புதிதாக உலக சாதனை படைத்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 11:21 pm

DIN

கா்நாடகத்தில் நடைபெறும் 4-ஆவது இந்திய ஓபன் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், வட்டு எறிதல் வீரா் யோகேஷ் கதுனியா ஆகியோா் புதிதாக உலக சாதனை படைத்தனா்.

இதில் சுமித் அன்டில் தனது முயற்சிகளில் ஒன்றில் 68.62 மீட்டா் தூரத்துக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்தாா். முன்னதாக அவா் கடந்த ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் எஃப்64 பிரிவில் 68.55 மீட்டா் தூரம் எறிந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், யோகேஷ் கதுனியா 48.34 மீட்டா் தூரத்துக்கு வட்டு எறிந்து புதிய உலக சாதனையை எட்டினாா். இந்த இருவருமே டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவா்களாவா். இருவரில் சுமித் அன்டில் தங்கமும், யோகேஷ் கதுனியா வெள்ளியும் வென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.