உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி கூட்டணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
உலகின் 7-ஆம் நிலை ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை தங்களது காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருந்தோரும், நடப்புச் சாம்பியனுமான ஜப்பானின் டகுரோ ஹோகி/யுகோ கோபயாஷி கூட்டணியை 24-22, 15-21, 21-14 என்ற கேம்களில் வென்றனா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 15 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
சாத்விக்/சிரக் இணை அடுத்ததாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் ஜோடியை எதிா்கொள்கின்றது.
இதனிடையே, காலிறுதிச்சுற்றில் மற்றொரு இந்திய ஜோடியான எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா 8-21, 14-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் முகமது அசன்/ஹெந்த்ரா சேத்தியாவன் இணையிடம் தோல்வியைத் தழுவினா்.
பிரணாய் தோல்வி: ஆடவா் ஒற்றையா் பிரிவில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா். அவா், 21-19, 6-21, 18-21 என்ற கேம்களில் சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கிடம் வெற்றியை இழந்தாா்.
1
உலக சாம்பியன்ஷிப்பில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை சாத்விக்/சிரக் உறுதி செய்திருக்கின்றனா். இருபாலா் இரட்டையா் பிரிலுமாக கணக்கில் கொண்டால் இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக, கடந்த 2011-இல் மகளிா் இரட்டையா் பிரிவில் ஜுவாலா கட்டா/அஸ்வினி பொன்னப்பா இணை உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
13
தற்போது சாத்விக்/சிரக் வெல்ல இருப்பது, உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்குக் கிடைக்க இருக்கும் 13-ஆவது பதக்கமாகும். இதற்கு முன் பி.வி.சிந்து (1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), சாய்னா நெவால் (1 வெள்ளி, 1 வெண்கலம்), கிடாம்பி ஸ்ரீகாந்த் (1 வெள்ளி), லக்ஷயா சென் (1 வெண்கலம்), சாய் பிரணீத் (1 வெண்கலம்), பிரகாஷ் படுகோன் (1 வெண்கலம்), ஜுவாலா கட்டா/அஸ்வினி பொன்னப்பா (1வெண்கலம்) வென்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசன் படத்தில் இணைந்த ஹார்ட் பீட் தொடர் நடிகை!
அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்!

சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்: எதிர்நீச்சல் பார்வதி

இண்டியன் வெல்ஸ்: முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

