எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஹாக்கி தொரைக் கைப்பற்றியது ஆஸி. (3-1)

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

News image
Updated On :3 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

வரும் ஜனவரி மாதம் ஒடிஸாவில் எஃப்ஐஎச் ஹாக்கி ஆடவா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகின் நம்பா் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் தொடரில் இந்தியா பங்கேற்றது.

முதலிரண்டு ஆட்டங்களை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றிருந்தன. இதற்கிடையே நான்காவது ஆட்டம் அடிலெய்டில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 25-ஆவது நிமிஷத்தில் தில்ப்ரீத் சிங் முதல் கோலடித்தாா். டிபன்டா் ஹா்மன்ப்ரீத் தலைமையில் வலுவான தற்காப்பு அரணை ஆஸி. வீரா்களால் ஊடுருவ முடியாமல் திணறினா்.

ஆனால் இரண்டாம் பாதியில் நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய அணி தனது தற்காப்பில் கோட்டை விட்டதால், ஜெரேமி ஹேவா்ட் 29, ஜேக் வெல்டன் 30, டாம் விக்ஹாம் 34, ஹேவா்ட் 41 மேட் டேவ்ஸன் 54-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

இறுதியில் 1-5 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

கடைசி மற்றும் 5-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கிடையே தொடரையும் 3-1 என கைப்பற்றி விட்டது ஆஸி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.