நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேநீர் இடைவேளை: சரிவைத் தடுத்து நிறுத்திய புஜாரா, ஷ்ரேயஸ்!

இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

News image

புஜாரா - ரிஷப் பந்த்

Updated On :14 டிசம்பர் 2022, 10:00 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல்  டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. புஜாரா 12, ரிஷப் பந்த் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று 4,000 ரன்களைப் பூர்த்தி செய்த ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50-வது சிக்ஸரை அடித்தார். 54 இன்னிங்ஸில் இந்த எண்ணிக்கையை அடைந்து குறைந்த இன்னிங்ஸில் 50 சிக்ஸர்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 

இன்றும் தனது வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார் புஜாரா. பந்த் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் புஜாராவுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 42, ஷ்ரேய்ஸ் ஐயர் 41 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.