அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

என்ன ஆச்சு இந்தியாவுக்கு?: வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள்!

வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்துள்ளது.

News image

ஜாகீர் ஹசன்

Updated On :17 டிசம்பர் 2022, 6:14 am

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்துள்ளது.

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 86, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்கள். தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வங்கதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. எனினும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 61.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா, ஷுப்மன் கில் சதமடித்தார்கள். 

முதல் டெஸ்டை வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. ஷான்டோ 25, ஜாகீர் ஹசன் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 10 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 471 ரன்கள் தேவைப்பட்டன.

இன்று, முதல் பகுதியில் வங்கதேச தொடக்க வீரர்கள் ஷான்டோவும் ஜாகீர் ஹசனும் சிறப்பாக விளையாடி விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்திய அணியினர் அளித்த நெருக்கடியை நன்கு எதிர்கொண்டார்கள். 

வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்துள்ளது. ஷான்டோ 64, ஜாகீர் ஹசன் 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த வங்கதேச ஜோடி என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்கள். வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 394 ரன்கள் தேவைப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.