உனாட்கட், அஸ்வின் நெருக்கடியால் 5 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்!

2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.
உனாட்கட், அஸ்வின் நெருக்கடியால் 5 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. பல வருடங்களுக்குப் பிறகு தனது 2-வது டெஸ்டை விளையாடும் உனாட்கட், முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். ஜாகீர் ஹசனின் விக்கெட்டை உனாட்கட்டும் ஷான்டோ விக்கெட்டை அஸ்வினும் எடுத்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்திலேயே ஷகில் அல் ஹசன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகள் அடித்த முஷ்ஃபிகுர் ரஹிம் 26 ரன்களில் உனாட்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் விரைவாக 25 ரன்கள் சேர்த்த லிட்டன் தாஸை அஸ்வின் வீழ்த்தினார்.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. மொமினுல் ஹக் 65, மெஹிதி ஹசன் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். உனாட்கட், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com