டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பஞ்சாபில் லிவிங்ஸ்டன்: ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு

இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2022, 7:19 am

DIN


இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் இரண்டாவது நாள் மெகா ஏலம் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. முதலாவதாக எய்டன் மார்கிரம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 2.6 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அஜின்க்யா ரஹானே ரூ. 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பிறகு, இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் லியாம் லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது. ரூ. 11 கோடியைத் தாண்டிய பிறகும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே போட்டி இருந்தது. இறுதியில் ரூ. 11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்தது.

லிவிங்ஸ்டன் 17 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி 103 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 23.75. ஸ்டிரைக் ரேட் 158.33. ஆனால், 9 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவரது ஸ்டிரைக் ரேட் 125.84.

சர்வதேச டி20 ஆட்டங்களில் அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 19.58.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.