மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சூர்யகுமார், வெங்கடேஷ் சரவெடி: கடைசி 5 ஓவர்களில் 86 ரன்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2022, 3:14 pm

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா 4 மாற்றங்கள் செய்யப்பட்டன.

மாற்றங்கள் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில், ருதுராஜ் 4 ரன்களுக்கு ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது வீரராக ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் விளாச ரன் ரேட் உயரத் தொடங்கியது. கிஷனும் மறுமுனையில் அதிரடி காட்டத் தொடங்கினார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, ஷ்ரேயஸ் 25 ரன்களுக்கும், கிஷன் 34 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது வீரராகக் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், ரன் ரேட்டில் சற்று மந்த நிலை ஏற்பட்டது.

இதன்பிறகு, டொமினிக் டிரேக்ஸ் வீசிய 16-வது ஓவரிலிருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்டத் தொடங்கினர். 17-வது ஓவரில் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தன.

அடுத்ததாக ரொமாரியோ ஷெபெர்ட் வீசிய ஓவரிலும் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தன. 

18-வது ஓவரை ஹோல்டர் நன்றாக வீசினாலும், 5-வது பந்தில் வெங்கடேஷ் சிறப்பான சிக்ஸர் அடித்ததால் அந்த ஓவரிலும் இந்தியாவுக்கு 10 ரன்கள் கிடைத்தன.

டிரேக்ஸ் மீண்டும் 19-வது ஓவரை வீச வெங்கடேஷ் 3 பவுண்டரிகள், சூர்யகுமார் 1 சிக்ஸர் பறக்கவிட இந்திய அணி 160 ரன்களைத் தாண்டியது.

ஷெபெர்ட் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் சூர்யகுமார் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதத்தைக் கடந்து ஸ்கோரையும் 180-ஐ தாண்டச் செய்தார். எனினும், அவர் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 1 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.