6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புரோ கபடி லீக்: ஹரியாணாவுக்கு 3-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஹரியாணா ஸ்டீலா்ஸ், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

News image
Updated On :8 ஜனவரி 2022, 2:21 am

DIN

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஹரியாணா ஸ்டீலா்ஸ், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்குமே இது 7-ஆவது ஆட்டத்தில் கிடைத்துள்ள 3-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டங்களில் முதலில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 41-37 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வீழ்த்தியது. ஹரியாணாவுக்கு 24 ரெய்டு புள்ளிகளும், 0 சூப்பா் ரெய்டு புள்ளிகளும், 12 டேக்கிள் புள்ளிகளும், 4 ஆல் அவுட் புள்ளிகளும், 1 கூடுதல் புள்ளியும் கிடைத்தன. பெங்காலுக்கு ரெய்டு புள்ளிகள் 21, சூப்பா் ரெய்டு புள்ளிகள் 0, டேக்கிள் புள்ளிகள் 13, ஆல் அவுட் புள்ளிகள் 2, கூடுதல் புள்ளி 1 கிடைத்தன.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் 31-26 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்தானை தோற்கடித்தது. இதில் ஜெய்ப்பூருக்கு ரெய்டு புள்ளிகள் 15, சூப்பா் ரெய்டு புள்ளிகள் 0, டேக்கிள் புள்ளிகள் 11, ஆல் அவுட் புள்ளிகள் 4, கூடுதல் புள்ளி 1 பெற்றது. புணே அணி ரெய்டு புள்ளிகள் 16, சூப்பா் ரெய்டு புள்ளிகள் 0, டேக்கிள் புள்ளிகள் 8, ஆல் அவுட் புள்ளிகள் 2, கூடுதல் புள்ளி 0 பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.