இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதியை நிரூபித்த ஹெட்மையர், அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடினார். எவின் லூயிஸ் அணியில் இடம்பெறவில்லை. சொந்தக் காரணங்களுக்காக ஃபேபியன் ஆலனும் காயம் காரணமாக ஷெல்டன் காட்ரெல்லும் அணியில் இடம்பெறவில்லை.
மே.இ. தீவுகள் அணி
நிலோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ், புரூக்ஸ், ஹெட்மையர், டெவன் தாமஸ், ஓடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டொமினிக் டிரேக்ஸ், அல்ஸாரி ஜோசப், ஒபட் மெகாய், அகேல் ஹுசைன், ஹேடன் வால்ஸ் ஜூனியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


