தினேஷ் கார்த்திக்கை ஆதரிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20யில் தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்‌ஷர் படேலைக் களமிறக்கியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20யில் தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்‌ஷர் படேலைக் களமிறக்கியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கட்டாக்கில் நடைப்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியது. 20 ஓவர்களுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் கிளாசன் அதிரடியால் 18.2 ஓவர்களில் 149 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிப் பெற்றது. 

இதில் தினேஷ் கார்த்திக்கு முன்பாக அக்‌ஷர் பட்டேலை அனுப்பிய கேப்டன் ரிஷப் பந்தின் முடிவு விமர்சிக்கப்பட்டது. தினேஷ் கார்திக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டது. 

சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

‘பினிஷர்’ என்ற முத்திரை வந்துவிட்டால் 15வது ஓவருக்கு பிறகுதான் விளையாட வேண்டுமா என்ன? ஏன் 12, 13வது ஓவர்களில் விளையாடக் கூடாதா? முன்னர் வந்தாலும் அவரால் விளையாட முடியும். நீண்ட நேரம் விளையாடினால் அவரால் நிச்சயமாக அதிக ரன்களை அணிக்காக எடுக்க முடியும். 

கம்பீர் கூறியதாவது:

6வது இடத்தில் விளையாடும் சிறப்புத் தன்மையான வீரர் என்றால் கடினமான சூழ்நிலைகளிலும் விளையாட வேண்டும். பொறுமையாயாக விளையாடி கடைசி 3 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கலாம். தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் ஏன் முன்பே ஆடவைக்கவில்லை. 

முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் ஸ்மித் கூறியதாவது: 

ஐபிஎல் போட்டிகளை விடுங்கள். இந்தியாவிலே மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். அவர் இந்தியாவுக்காக எவ்வளவு போட்டிகளில் விளையாடியிருக்கிறாரென பாருங்கள். எப்படி அக்‌ஷர் பட்டேலை இவருக்கு முன்பாக அனுப்பலாம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com