தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இங்கிலாந்து தொடரிலிருந்தும் ராகுல் விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஜூன் 2022, 4:18 pm

DIN


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

"கேஎல் ராகுல் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் மும்பையில் இன்று கூடுகின்றனர். நள்ளிரவில் இங்கிலாந்து புறப்படுகின்றனர். கேஎல் ராகுல் அணியுடன் பயணிக்கவில்லை. இந்த வார இறுதியில் உடற்தகுதித் தேர்வில் ராகுல் பங்கேற்கவுள்ளார். எனினும், காயத்திலிருந்து மீள அவர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளவுள்ளார்."

2021 டெஸ்ட் தொடரில் தடைபட்ட கடைசி டெஸ்ட் ஆட்டம் ஜூலை 1-ம் தேதி பிர்மிங்காமில் தொடங்குகிறது. ரிஷப் பந்த் தவிர அனைத்து வீரர்களும் வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து புறப்படுகின்றனர். ஒரேயொரு ஆட்டம் என்பதால் ராகுலுக்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. ராகுலுக்குப் பதில் ஜாஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.