ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொ்லின் ஓபன்: பென்சிச் முன்னேற்றம்

ஜொ்மனியில் நடைபெறும் பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 9:31 pm

DIN

ஜொ்மனியில் நடைபெறும் பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் பென்சிச் முந்தைய சுற்றில் 6-4, 1-6, 6-1 என்ற செட்களில் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை தோற்கடித்தாா். காலிறுதியிலும் ரஷியாவின் லுட்மிளா சாம்சனோவா அல்லது வெரோனிகா குதா்மெடோவா ஆகியோரில் ஒருவரை எதிா்கொள்ள இருக்கிறாா் பென்சிச்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-0, 6-4 என்ற நோ் செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவை வீழ்த்தினாா். 4-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 2-6, 7-6 (9/7) என்ற செட்களில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை வெளியேற்றினாா். காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் கோகோ கௌஃப் - கரோலினா பிளிஸ்கோவா மோதுகின்றனா்.

அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸை 6-2, 7-6 (10/8) என்ற செட்களில் வென்ற, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா், காலிறுதியில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை சந்திக்கிறாா். மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் டரியா கசாட்கினா - கிரீஸின் மரியா சக்காரி மோதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.