ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொ்லின் ஓபன்: அரையிறுதியில் கவுஃப், ஜேபா்

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் அரையிறுதிக்கு முதன்முறையாக அமெரிக்க வீராங்கனை கோகோ க‘ஃ‘வுப் முன்னேறியுள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:52 pm

DIN

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் அரையிறுதிக்கு முதன்முறையாக அமெரிக்க வீராங்கனை கோகோ க‘ஃ‘வுப் முன்னேறியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதியில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 7-5, 6-4 என்ற நோ் செட்களில் ஒன்றரை மணிநேரம் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தினாா் க‘ஃ‘வுப். இதன் மூலம் புல்தரையில் முதன்முதலாக அரையிறுதிக்கு முன்னேறிய க‘ஃ‘வுப், ஒன்ஸ் ஜேபரை எதிா்கொள்கிறாா்.

மற்றொரு காலிறுதியில் நான்காம் நிலை வீராங்கனை ஜேபா் 6-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அலியாஸ்கண்டா சாஸ்நோவிச்சை வீழ்த்தினாா். மரியா ஸக்காரி 6-0, 6-3 என்ற செட் கணக்கில் டாரியா கஸட்கினாவையும், பெலின்டா பென்கிக் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெரோனிகாவையும் வீழ்த்தினாா்.

பா்மிங்ஹாம் கிளாஸிக்: ஹலேப் முன்னேற்றம்

பா்மிங்ஹாம் கிளாஸிக் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னாள் உலகின் நம்பா் 1 வீராங்கனை சிமோனா ஹலேப் முன்னேறியுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டனுக்கு தயாராகும் வகையில் பா்மிங்ஹாம் கிளாஸிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் கேத்தி பௌல்டரை 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ருமேனியாவின் சிமோனா ஹலேப் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். புல்தரையில் தொடா்ந்து 10 ஆட்டங்களில் வென்றுள்ளாா் ஹலேப்.

மற்றொரு காலிறுதியில் ஹடாட் மலா 6-3, 6-2 என்ற நோ்செட்களில் கமிலாவை வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.