ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

7 மாதத்திற்கு முன் இதெல்லாம் நடக்குமென நினைக்கவில்லை : ஹார்திக் பாண்டியா

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகிப்பார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:33 am

DIN

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகிப்பார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 
 
2021 டி20 உலககோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி எடுத்து வந்தார். ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக தலைமை தாங்கி கோப்பையை வென்றதால் அவருக்கு அயர்லாந்து அணிக்கு எதிராக கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது. இதக்குறித்து ஆங்கில சேனல் ஒன்றிற்கு பாண்டியா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிச்சயமாக அடுத்த தொடரை நான் வழிநடத்துவேன் என இத்தொடரின் தொடக்கத்தில் தெரியும். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது எப்போதும் பெருமையானது. 7 மாதத்திற்கு முன்பு இப்படியெல்லாம் ஆகுமென யார் நினைத்தார்கள்? சரியான சிந்தனையுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.  

அணிக்கு தேவைப்படும் போது சில ஓவர்களை வீச நான் அப்போதுமே தயாராக இருக்கிறேன். ஒரு அணியில் 6 பவுலர்கள் இருப்பது எப்போதுமே டி20 அணிக்கு முக்கியமானது. 

நான் எப்போதுமே பினிஸிங் ரோலை விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரையில் நான் எங்கு விளையாடினாலும் மகிழ்சியாக விளையாடுவேன். எனக்கு சவாலான சூழ்நிலைகள் மிகவும் பிடிக்கும். வந்த முதல் இரண்டு பந்துகளிலே அடிக்க வேண்டுமென்றாலும் அடிப்பேன். எனக்கு பொதுவாகவே சவால்களை எதிர்த்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.