வருங்காலத்தில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார்: கில்கிறிஸ்ட்
இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.


இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
28 வயதான டிராவிஸ் ஹெட் இலங்கைத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இவர் ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதினை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
“நீண்ட நாள் நோக்கில் அநேகமாக அடுத்த 12 மாதங்களில் டிராவிஸ் ஹேட் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக விளையாடுவார்.
அவர் தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மேலும் சிரப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அளிப்பார் என நினைக்கிறேன்.
ஆரோன் பின்ச்சால் அடுத்த ஒருநாள் உலக கோப்பை வரை விளையாட முடியுமா எனத்தெரியவில்லை.ஆரோன் பின்ச் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடத்திற்கு இவர் சரியாக பொருந்துவார் என நினைக்கிறேன்” என கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...