மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அஸ்வினுக்கு கரோனா

இந்திய கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :21 ஜூன் 2022, 8:10 pm

DIN

இந்திய கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் சென்ற இந்திய அணியினருடன் அவா் பயணிக்கவில்லை.

தற்போது அவா் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு கரோனா தடுப்பு நடைமுறைகளின் அடிப்படையில் அவா் அணியினருடன் இணைவாா் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் ஆட்டத்துக்கு அஸ்வின் தயாராகிவிடுவாா் என்றாலும், அதற்கு முன் இங்கிலாந்து உள்நாட்டு அணியான லெய்செஸ்டா்ஷைருடனான பயிற்சி ஆட்டத்தில் அவா் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவதாக அந்த வட்டாரங்கள் கூறின. ஐபிஎல் போட்டிக்குப் பிறகு அஸ்வின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லீக் போட்டியில் 20 ஓவா்கள் வீசி தன்னை ஃபாா்மில் வைத்துக் கொண்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.