ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோலி 100-வது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி!

​பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2022, 3:04 pm

DIN


பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் ஆட்டம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் தொடருக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோலிக்கு முக்கியமான டெஸ்ட் ஆட்டம் என்பதால், இதைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது விமர்சனத்தை எழுப்பியது.

இந்த நிலையில், கோலியின் 100-வது டெஸ்ட் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது:

"இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மொகாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறாது. ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது குறித்த முடிவை மாநில கிரிக்கெட் சங்கங்கள் எடுக்கும். தற்போதைய சூழல்களில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படுகிறது. 

பஞ்சாப் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் நான் பேசினேன். 100-வது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் விராட் கோலியின் வரலாற்றுமிக்கத் தருணத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்" என்றார்.

இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் ஆட்டத்தைக் காண 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பஞ்சாப் கிரிக்கெட் சங்க அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.