டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளார்கள். ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, இந்திய கேப்டனாக அறிமுகமாகும் டெஸ்ட் இது. கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. விஹாரி 30, கோலி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய விஹாரி, 93 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதனால் இனி வரும் டெஸ்டுகளில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று 38 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இந்த இலக்கை எட்டிய 6-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குறைந்த இன்னிங்ஸில் 8000 டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
154 - சச்சின் டெண்டுல்கர்
158 - ராகுல் டிராவிட்
160 - சேவாக்
166 - கவாஸ்கர்
169 - கோலி
இந்திய அணி 41 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 54, கோலி 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


