மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.


மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
நியூலாந்தின் பே ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ராகர் 67, ராணா 53, ஸ்மிரிதி மந்தனா 52, தீப்தி சர்மா 40 ரன்கள் சேர்த்தனர். 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் இந்திய மகளிர் அணியின் அபார பந்துவீச்சு முன் பாகிஸ்தான் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இதையும் படிக்க- பந்துவீச்சிலும் மிரட்டிய ஜடேஜா...174 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்
அந்த அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சிட்ரா அமீன் 30, டயானா 24, ஃபாத்திமா சானா 17, மரூஃப் 15, சிட்ரா நாவஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெயக்வாட் 4, ஜுவான் கோஸ்வாமி, ஸ்னேக் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...