ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த வெற்றி

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த வெற்றி

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில், அந்த அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும். மறுபுறம், இந்தியாவிடம் முதல் ஆட்டத்தில் தோற்ற பாகிஸ்தானுக்கு இது அடுத்த தோல்வி.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடித்தது. அடுத்து ஆஸ்திரேலியா 34.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் கேப்டன் பிஸ்மா மரூஃப் 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாச, ஆலியா ரியாஸ் 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் அலானா கிங் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அலிசா ஹீலி 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் அடிக்க, ரேச்சல் ஹெய்ன்ஸ் 34, கேப்டன் மெக் லேனிங் 35 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனா். பாகிஸ்தான் தரப்பில் ஒமைமா சோஹைல் 2 விக்கெட் வீழ்த்தினாா்.

இன்றைய ஆட்டம்: மே.இ. தீவுகள் - இங்கிலாந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com