மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்

ஐபிஎல் 2022 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2022, 11:08 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 59  டெஸ்டுகள், 190 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் ஷேன் வாட்சன் விளையாடியுள்ளார். 2008 ஐபிஎல்-லில் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார். ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடிய வாட்சன், இரு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடி பிறகு 2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். இறுதிச்சுற்றில் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். 2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார். அந்த அணியில் பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாகவும் ஜேம்ஸ் ஹோப்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் உள்ளார்கள்.  இந்நிலையில் தில்லி அணியின் மற்றொரு உதவிப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.