தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கவாஜா மீண்டும் அபாரம்: முதல் நாளில் ஆஸி. நிதானம்

​பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2022, 12:53 pm

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் லாகூரில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய டேவிட் வார்னரை 7 ரன்களுக்கு வீழ்த்தினார் ஷஹீன் அப்ரிடி. அதேஓவரில் மார்னஸ் லபுஷேன் (0) விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.

இதன்பிறகு, உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்த நிலையில், முதலில் கவாஜா அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஸ்மித்தும் அரைசதத்தை எட்டினார்.

Story image

இந்த முறையும் அரைசதத்தை சதமாக மாற்றாமல் 59 ரன்களுக்கு நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார் ஸ்மித். இந்தத் தொடரில் மற்றொரு சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவாஜாவும் 219 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் இந்த முறையும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.

கேமரூன் க்ரீன் 20 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளையும், சஜித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.