தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள பயிற்சியாளர்கள் இவர்களா?

மெக்குல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார்கள். 

News image

இங்கிலாந்து அணி

Updated On :6 மே 2022, 12:29 pm

DIN


லண்டன்: இங்கிலாந்தின் அணியின் நிர்வாக இயக்குநராக ராப் கீ பொறுப்பேற்ற பின்னர் நியூசிலாந்து முன்னாள் வீரரும் தற்போதைய கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான மெக்குல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார்கள். 

மெக்கல்லம் மற்றும் கேரி கிறிஸ்டன் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களாக இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று ராபர்ட் கீ விருப்பப்படுவதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களாக  டெஸ்டில் இறங்குமுகமாக இருக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது.

வெள்ளைப் பந்து (ஒருநாள் & டி 20) மற்றும் சிவப்புப் பந்து (டெஸ்ட்) அணிகளுக்கு தனித்தனிப் பயிற்சியாளர்களை இங்கிலாந்து நியமிப்பது இதுவே முதல்முறையாக இருக்கப்போகிறது. 

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் சைமன் கடிச், இங்கிலாந்தின் கோலிங்வுட், நிக் நைட் ஆகியோரும் பயிற்சியாளர்களுக்கான பரிசீலனையில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.