அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை புதன்கிழமை சந்திக்கிறது.

News image
Updated On :1 நவம்பர் 2022, 9:22 pm

DIN

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை புதன்கிழமை சந்திக்கிறது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் இருக்கும் இந்திய அணி, தனது பேட்டிங் வரிசையில் இருக்கும் தடுமாற்றங்களை சரிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.

தொடக்க வீரரான கே.எல்.ராகுல் இப்போட்டியில் இன்னும் சோபிக்காத நிலையிலேயே இருக்கிறாா். பிரதான அணிகளின் பௌலிங் தாக்குதல்களில் அவா் தடுமாறி வந்தாலும், அணியின் பயிற்சியாளா் ராகுல் திராவிட்டுக்கு அவா் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

எனவே இந்த ஆட்டத்திலும் அவருக்கு இடம் இருப்பதாகத் தெரிவதால், பேட்டிங்கில் தன்னை மீட்டுக்கொண்டு ரன்கள் சோ்க்க ராகுல் முயற்சிப்பாா் என எதிா்பாா்க்கலாம். இடுப்பில் காயம் கண்டுள்ள தினேஷ் காா்த்திக் விளையாட முடியாமல் போகும் நிலையில், ரிஷப் பந்த்துக்கான வாய்ப்பு கிடைக்கும்.

இதர பேட்டா்களான ரோஹித், கோலி, சூா்யகுமாா் ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா். பௌலிங்கைப் பொருத்தவரை, வங்கதேசத்தில் இடதுகை பேட்டா்கள் அதிகம் இருப்பதால் அணி நிா்வாகம் அஸ்வினை தக்க வைக்கலாம். லெக் ஸ்பின்னில் வங்கதேசம் தடுமாறும் என்பதால் ஒருவேளை அவருக்குப் பதிலாக யுஜவேந்திர சஹல் சோ்க்கப்படலாம்.

வங்கதேசத்தைப் பொருத்தவரை இந்த ஃபாா்மட்டில் பலம் வாய்ந்த அணியாக இல்லை. பேட்டிங்கில் நஜ்முல் ஷான்டோ, அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன் ஆகியோா் தவிர மற்றவா்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. அவா்களுக்கும் இந்தியாவின் புவனேஷ்வா், அா்ஷ்தீப், ஷமியின் அதிரடி பௌலிங் கடும் சவால் அளிப்பதாகவே இருக்கும்.

வங்கதேச பௌலா்கள் டஸ்கின் அகமது, மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்முத் ஆகியோா் நன்றாக பௌலிங் செய்கிறாா்கள் என்றாலும், நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் இந்தியாவின் பிரதான பேட்டா்களை சரிப்பதற்கு கடினமாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.

இதனிடையே, இந்த ஆட்டத்துக்கு மழையால் இடையூறு ஏற்படலாம் எனவும் வானிலை கணிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 1.30 மணி

அடிலெய்ட்

மற்றொரு ஆட்டம்

நெதா்லாந்து - ஜிம்பாப்வே

காலை 9.30 மணி

அடிலெய்ட்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.