ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்...: தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது குறித்து ராகுல் டிராவிட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 நவம்பர் 2022, 12:00 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி ஞாயிறன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிராக நாளை விளையாடுகிறது. தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:

பெர்த் ஆட்டம் ஏமாற்றமாக அமைந்தது. நாங்கள் நன்றாகப் போராடினோம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்... நாங்கள் சில தவறுகளும் செய்தோம், கொஞ்சம் வேறு மாதிரியான முடிவுகள் அமைந்திருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நாங்கள் நன்கு விளையாடி இனிவரும் ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும். (உலகக் கோப்பையை வெல்ல) அடுத்து நான்கு ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.