சிஎஸ்ஏ: இளம் தென்னாப்பிரிக்க வீரரின் புதிய சாதனை!
இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் டி20 போட்டிகளில் 3வது அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.


இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் டி20 போட்டிகளில் 3வது அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
சிஎஸ்ஏ டி20 தொடரில் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த டெவால்ட் ப்ரீவிஸ் டி20யில் இந்த சாதனையை புரிந்துள்ளார். 57 பந்துகளில் 162 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 13 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 284.21 ஆகும்.
இதற்கு முன்பாக மே.இ.தீவுகள் அணியை செர்ந்த கிறிஸ் கெயில் ஐபில் போட்டியில் 66 பந்துகளுக்கு 175 ரன்கள் எடுத்தது முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 172 ரன்களுடன் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே பேட்டர் ஹாமில்டன் 71 பந்துகளில் 162 ரன்களுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
உள்ளூர் டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் 150 ரன்களை அடித்தவர் பட்டியலில் டெவால் பிரிவீஸ் முதலிடத்தில் இருக்கிறார். 52 பந்துகளில் 150 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது ஸ்டைல் பிரபல தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் போலவே இருப்பதால் இவரை “பேபி ஏபி” என ரசிகர்கள் அழைப்பதுண்டு. இந்தப் போட்டி குறித்து டி வில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “டெவால்ட் ப்ரீவிஸ். வேறெதும் சொல்லத் தேவையில்லை” என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...