மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கே.எல். ராகுலுக்கு முழு ஆதரவு: டிராவிட் உறுதி

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சரியாக விளையாடாத கே.எல். ராகுலுக்கு அணியின் முழு ஆதரவு உள்ளதாக...

News image
Updated On :1 நவம்பர் 2022, 10:40 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சரியாக விளையாடாத கே.எல். ராகுலுக்கு அணியின் முழு ஆதரவு உள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

30 வயது கே.எல். ராகுல் சமீபகாலமாக சரியாக விளையாடாததால் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 4,9,9 எனக் குறைவான ரன்களே எடுத்துள்ளார். இந்நிலையில் கே.எல். ராகுல் பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:

தன்னுடைய திறமையை நிரூபித்தவர் கே.எல். ராகுல். இந்தப் போட்டி மேல்வரிசை வீரர்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீச்சை அருமையான எதிர்கொண்டார். அடுத்த மூன்று, நான்கு ஆட்டங்களில் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். வார்த்தைகளாலும் செயல்களாலும் ராகுலுக்கு அணியின் ஆதரவு உண்டு என்பதை அவர் அறிந்துள்ளார். ராகுலை முழுவதுமாக ஆதரிக்கிறோம். அவரைப் பற்றி எங்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை. அவர் நன்றாக விளையாடும்போது தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்த இந்திய அணி நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.