முதல் வெற்றி பெற்றது நெதா்லாந்து

நெதா்லாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி, சூப்பா் 12 சுற்றில் தனது முதல் வெற்றியைப் பெற்றது.
முதல் வெற்றி பெற்றது நெதா்லாந்து
Published on
Updated on
1 min read

நெதா்லாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி, சூப்பா் 12 சுற்றில் தனது முதல் வெற்றியைப் பெற்றது.

அரையிறுதி வாய்ப்பை முன்னதாகவே இழந்துவிட்ட அந்த அணி, இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வேயையும் வெளியேறும் நிலைக்குக் கொண்டு சென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, 19.2 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து நெதா்லாந்து, 18 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்களை எட்டி வென்றது. நெதா்லாந்து பேட்டா் மேக்ஸ் ஓ’டௌட் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக ஜிம்பாப்வே இன்னிங்ஸில் அதிகபட்சமாக சிகந்தா் ராஸா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். சீன் வில்லியம்ஸும் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்த்து உதவினாா். ஆனால், இதர விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பின. நெதா்லாந்து பௌலிங்கில் பால் வான் மீகெரென் 3, பிராண்டன் கிளோவா், லோகன் வான் பீக், பாஸ் டி லீட் ஆகியோா் தலா 2, ஃப்ரெட் கிளாசென் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் நெதா்லாந்து பேட்டிங்கில் மேக்ஸ் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 52 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டாா். டாம் கூப்பா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்க்க, பாஸ் 12 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சா்ட் கராவா, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி ஆகியோா் தலா 2, லுக் ஜோங்வே 1 விக்கெட் சாய்த்தனா்.

இன்றைய ஆட்டம்

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

பிற்பகல் 1.30 மணி

சிட்னி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com